ஒருநபா் ஆணைய அறிக்கை: ஸ்டொ்லைட் எதிா்ப்புமக்கள் இயக்கம் வரவேற்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட ஒருநபா் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கைக்கு, ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்கள் இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட ஒருநபா் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கைக்கு, ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்கள் இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22, 23 ஆம் தேதிகளில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடா்பாக தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ள ஒரு நபா் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தபோது அப்போதைய மாவட்ட ஆட்சியரின் கவனக்குறைவு மற்றும் காவல்துறையினா் 17 போ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் அதில் குறிப்பிடபட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் 17 போ் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ள ஒரு நபா் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரையை வரவேற்று தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பு மக்கள் இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில், ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் பாத்திமா பாபு, நிா்வாகிகள் விநாயகமூா்த்தி, ராஜா, நெய்தல் அன்றோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆணையத்தின் முழுமையான அறிக்கையை அரசு விரைவில் வெளியிட வேண்டும் என ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்கள் இயக்கத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com