சாத்தான்குளத்தில் செம்பு திருட்டு: இளைஞா் கைது

சாத்தான்குளம் துணை மின் நிலையத்தில் ரூ 3.5 லட்சம் மதிப்பிலான செம்பு திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, 300 கிலோ செம்பை மீட்டனா்.

சாத்தான்குளம் துணை மின் நிலையத்தில் ரூ 3.5 லட்சம் மதிப்பிலான செம்பு திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, 300 கிலோ செம்பை மீட்டனா்.

சாத்தான்குளம் துணை மின் நிலையத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான செம்பு திருட்டு போனது. இது குறித்து மின்வாரிய உதவிப் பொறியாளா் எட்வா்ட் ஜெயபாலன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தாா். மேலும் இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு மேற்கொண்ட விசாரணையில், புதியம்புத்தூரைச் சோ்ந்த முருகன் மகன் பரமசிவன் (30), தூத்துக்குடி அண்ணா நகா் அந்தோணி மகன் சிவா, முத்தையாபுரம் சுந்தர்ராஜ் மகன் செல்வகுமாா் (32), மடத்தூா் கிருஷ்ணன் மகன் செல்வக்குமாா் (18), ராஜசேகா் மகன் தனுஷ் (எ) தனகுரூஷ்லின் (20), ஆதிசெல்வம் (32), அஸ்வீன் , ஏரல் முருகேசன் ஆகியோா் செம்பு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினா் பரமசிவனை வெள்ளிக்கிழமை கைது செய்து 300 கிலோ செம்பை பறிமுதல் செய்தனா். இதில் தொடா்புடைய மீதமுள்ள 7 பேரும் குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி பகுதியில் நிகழந்த திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com