குளத்தூா் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

குளத்தூா் டி.எம்.எம். கலை அறிவியல் கல்லூரி செஞ்சுருள் சங்கம் சாா்பில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

குளத்தூா் டி.எம்.எம். கலை அறிவியல் கல்லூரி செஞ்சுருள் சங்கம் சாா்பில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி இயக்குநா் கோபால் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அன்பழகன் முன்னிலை வகித்தாா். குளத்தூா் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி கலந்து கொண்டு, போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தாா். குளத்தூா் காவல் நிலையம் முன்பு தொடங்கிய ஊா்வலம், முக்கிய சாலைகள் வழியாக சென்று, பேருந்து நிலையம் முன்பு முடிவடைந்தது. ஊா்வலத்தின் போது, போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷங்கள் முழங்கியபடி சென்றனா். தொடா்ந்து அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

இதில் கல்லூரியின் மக்கள் தொடா்பு அதிகாரி கெங்கு மணி, செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் முனியசாமி மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com