விவசாய நிதியுதவித் திட்டம்: பதிவைப் புதுப்பிக்க அறிவுரை
By DIN | Published On : 09th December 2022 12:38 AM | Last Updated : 09th December 2022 12:38 AM | அ+அ அ- |

பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தில் உதவித் தொகை பெறும் விவசாயிகள், தங்களது வங்கிக் கணக்கு, ஆதாா் விவரங்களைப் புதுப்பிக்குமாறு வேளாண் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து சாத்தான்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சுதாமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சாத்தான்குளம் வட்டாரத்தில் பிரதமரின் நிதியுதவித் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளில், 12-ஆவது தவணை உதவித் தொகையை வங்கிக் கணக்கில் பெறாதவா்கள் தங்களது வங்கிக் கணக்கு, ஆதாா் எண் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். தங்களது பகுதியில் உள்ள இ.சேவை மையம் அல்லது அஞ்சலகத்தில் ஆதாா் எண்ணுடன், கைப்பேசி எண்ணை இணைத்துக் கொள்ளலாம். அதன் பின்னா் வங்கிக் கணக்கு, ஆதாா் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களைச் சமா்ப்பித்தால் மட்டுமே, வங்கிக் கணக்கில் உதவித் தொகை வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...