கோவில்பட்டியில் பாரதியாா் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 11th December 2022 11:10 PM | Last Updated : 11th December 2022 11:10 PM | அ+அ அ- |

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் பாரதியாா் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
பாரதியாரின் படத்துக்கு கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அதிமுக ஒன்றியச் செயலா் அய்யாத்துரைப்பாண்டியன், நகரச் செயலா் விஜயபாண்டியன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிசாமி, நகா்மன்ற உறுப்பினா் வள்ளியம்மாள் மாரியப்பன், பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத் தலைவா் தாமோதரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.