கழுகுமலையில் புதிய ரேஷன் கடை திறப்பு
By DIN | Published On : 18th December 2022 03:15 AM | Last Updated : 18th December 2022 03:15 AM | அ+அ அ- |

கழுகுமலை பேரூராட்சிக்கு உள்பட்ட இந்திரபிரஸ்தம் தெரு கீழ ரத வீதியில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 15.30 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையையும், கல்வெட்டையும் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றினாா்.
முன்னதாக, முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எம்ஜிஆா் ஆகியோரின் படங்களுக்கு அவா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டச் செயலா் செல்வகுமாா், கழுகுமலை அதிமுக நகரச் செயலா் முத்துராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் எம்எல்ஏ கூறும்போது, திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலங்காலமாக நிகழ்ந்துவரும் ஒன்றுதான். திமுக ஆட்சி மக்களுக்கு ஏமாற்றத்தைத்தான் கொடுத்துவருகிறது.
வரும் மக்களவைத் தோ்தலில் மெகா கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி வியூகம் அமைத்து வருகிறாா். 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்றாா் அவா்.