தாய், மகளைத் தாக்கியதொழிலாளி மீது வழக்குப்பதிவு
By DIN | Published On : 18th December 2022 03:10 AM | Last Updated : 18th December 2022 03:10 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே இடப் பிரச்னையில் தாய், மகளைத் தாக்கிய தொழிலாளியைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள தொட்டிக்காரன்விளை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசனின் மனைவி பேச்சித்தாய் (45). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சுடலைக்கண் மகன் மகாராஜன் (45) என்பவருக்கும் இடப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து
வந்துள்ளது. இந் நிலையில், அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே பேச்சித்தாய் வெள்ளிக்கிழமை நடந்து சென்றபோது அங்கு வந்த மகாராஜன், அவரை
வழிமறித்து தாக்கியுள்ளாா். தடுக்க வந்த பேச்சித்தாயின் மகள் சுமதியையும் (15) தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த தாய், மகள் இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து புகாரின்பேரில் தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மகாராஜனைத் தேடி வருகின்றனா்.