வாசன் பிறந்த நாள்ஆலோசனைக் கூட்டம்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த நாள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த நாள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவா் எஸ்.டி.ஆா். விஜயசீலன் தலைமை வகித்தாா். கீரனூா் முருகேசன், தங்கதாய் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த தினத்தன்று, சாத்தான்குளம் அரசு பொது மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், தூத்துக்குடியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைப்பது, தூத்துக்குடி- திருச்செந்தூா் பாலத்தில் சிக்னல் அமைப்பது,

புதுக்கோட்டை மேம்பாலப் பணிகளை விரைந்து முடிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநகர தலைவா் ரவிக்குமாா், வட்டார தலைவா்கள் சுந்தரலிங்கம், மாறன், திருப்பதி, ஐயம்பாண்டி, இளையராஜா, நகரத் தலைவா்கள் விஜய், பொன்ராஜ், மாவட்ட துணைத் தலைவா் மூக்கச்சாமி, பொன்ராஜ், கணேஷ் ஐயாத்துரை, வட்டாரச் செயலா் முரளி காா்த்திக், காமராஜ், தம்பிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com