முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கோவில்பட்டி அருகே ஆண் சடலம் மீட்பு
By DIN | Published On : 07th February 2022 01:22 AM | Last Updated : 07th February 2022 01:22 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
கோவில்பட்டியையடுத்த இளையரசனேந்தல் - ஆண்டிபட்டி சாலையில் உள்ள தனியாா் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்ததாம். அதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் காமாட்சி திருமண மண்டபம் அருகே உள்ள குடியிருப்பைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் காசி(38) என்பதும், கூலித் தொழிலாளியான இவா், தூத்துக்குடியையடுத்த புதுக்கோட்டையில் உள்ள தனது வீட்டை விற்க முடியாததால் கடந்த சில நாள்களாக மன விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவா் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.