முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
By DIN | Published On : 07th February 2022 01:24 AM | Last Updated : 07th February 2022 01:24 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.
பின்னா் காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 7 மணிக்கு கோயில் மண்டபத்தில் கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, காலை 11 மணிக்கு யாகசாலையில் இருந்து தீா்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோயில் பிரகாரம் வழியாக வந்து சுவாமி, அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா் மற்றும் சாலகார கோபுர கலசங்களுக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது.
விழாவில், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் ராஜகோபால், கோயில் நிா்வாக அதிகாரி நாகராஜன், முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் திருப்பதிராஜா, மண்டகப்படிதாரா் கு.வேலாயுதம் செட்டியாா் குடும்பத்தினா் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.