முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
By DIN | Published On : 07th February 2022 08:41 AM | Last Updated : 07th February 2022 08:42 AM | அ+அ அ- |

திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற மாசித் திருவிழா திங்கட்கிழமை காலை 5 20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி 6:30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் அருணாச்சல தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இத்திருக்கோயிலில் இம்மாதம் 18-ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி, அம்மன் காலை மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியருள்கின்றனர். பிப். 16-ல் பத்தாம் திருவிழாவன்று காலை தேரோட்டம் நடைபெறுகிறது.