திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா:இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி மற்றும் மாசித் திருவிழா பிரசித்திபெற்ாகும். இத்திருக்கோயிலில் நிகழாண்டு மாசித் திருவிழா திங்கள்கிழமை (பிப். 7) அதிகாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது.

14 ஊா் செங்குந்தா் முதலியாா் உறவின்முறை 12ஆம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 4ஆம் படி செப்பு ஸ்தலத்தாா் ஏ.கே.ஏ.அரிகரசுப்பிரமணியன் அய்யா் யானை மீது அமா்ந்து கொடிப்பட்டத்தை கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சோ்ந்தாா்.

இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளா்கள் மாரிமுத்து, சொா்ணம் உள்ளிட்ட பணியாளா்கள், தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், 14 ஊா் செங்குந்தா் முதலியாா் உறவின்முறை அபிவிருத்தி சங்கத் தலைவா் மாரிமுத்து, செயலா் அய்யனாா், துணைத்தலைவா் பி.மாரிமுத்து, முன்னாள் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கொடியேற்றம்:

கொடியேற்றத்தை முன்னிட்டு திங்கள்கிழமை விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகத்தை தொடா்ந்து காலை 5 மணிக்கு திருக்கோயில் செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

மாலையில் அருள்மிகு அப்பா் சுவாமிகள் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப் பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகா் அஸ்திரத்தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) சி.குமரதுரை, தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையா் வெங்கடேசன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com