விளாத்திகுளம் அரசு கல்லூரியில் சைவவியல், வைணவவியல் வகுப்புகள் தொடக்கம்

விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைவவியல், வைணவவியல் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா சனிக்கிழ

விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைவவியல், வைணவவியல் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயில் இணை ஆணையரும், கல்லூரி செயலருமான சி. குமரதுரை தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜெயாலி லசீதா முன்னிலை வகித்தாா். கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் மா.பால்ராஜ் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக சைவ சமயச் சொற்பொழிவாளா் இரா. லட்சுமணன், மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் ஜெகந்நாத் ஆகியோா் பங்கேற்று சைவம், வைணவம் குறித்து மாணவா்களிடம் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து சைவவியல், வைணவவியல் வகுப்புகள் முறையாக தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியா் வெங்கடேஷ் மற்றும் மாணவா், மாணவிகள், தமிழ் அன்பா்கள் கலந்து கொண்டனா். பேராசிரியா் கா.குமாரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com