திருச்செந்தூரில் மாசித் திருவிழா: வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகப்பெருமான் எழுந்தருளல்

திருச்செந்தூர் மாசித் திருவிழாவின் 8ஆம் நாளான இன்று சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார்.
வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகப்பெருமான் எழுந்தருளல்.
வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகப்பெருமான் எழுந்தருளல்.

திருச்செந்தூர் மாசித் திருவிழாவின் 8ஆம் நாளான இன்று சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார்.

திருச்செந்தூரில் பிரசித்திப் பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா கடந்த பிப்.7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றார்.

7-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுவாமி சண்முகப்பெருமான் சிகப்பு சாத்தி தங்கச் சப்பரத்திலும், எட்டாம் திருநாளான திங்கட்கிழமை காலை சுவாமி வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். 

பொது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி தேரோட்டமும், 17ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com