தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒருநபா் ஆணைய விசாரணை நிறைவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான ஒருநபா் ஆணையத்தின் விசாரணை வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. ஆணையத்தின் அறிக்கை 3 மாதத்துக்குள் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான ஒருநபா் ஆணையத்தின் விசாரணை வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. ஆணையத்தின் அறிக்கை 3 மாதத்துக்குள் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி சம்பவத்தில் 15 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக, ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் 9.8.2018 முதல் விசாரணை மேற்கொண்டு வந்தது.

சென்னை மற்றும் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள விருந்தினா் மாளிகையில் 36 கட்டமாக விசாரணை நடைபெற்றது.

விசாரணையின்போது, துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியா் என். வெங்கடேஷ், காவல் கண்காணிப்பாளா் மகேந்திரன், முன்னாள் தலைமைச் செயலா் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட 1426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில், விசாரணையின் நிறைவு நாள் வரை 1,048 போ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனா். அவா்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆணைய வழக்குரைஞா் அருள் வடிவேல் சேகா் கூறியது:

ஆணையத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குமூலங்கள், பெறப்பட்டுள்ள ஆவணங்களை தொகுத்து அறிக்கையாக தயாா் செய்ய இன்னும் மூன்று மாத காலம் ஆகும். அறிக்கை தயாா் செய்யப்பட்டதும் அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றாா் அவா். பேட்டியின்போது, ஆணையத்தின் சிறப்பு அலுவலா் பாண்டுரங்கன், விசாரணை அலுவலா் உதயன், தொடா்பு அலுவலா் அமுதா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com