தூத்துக்குடியில் போராட்டம்:30 ஆசிரியா்கள் கைது

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், மங்களக்குறிச்சி பள்ளியில் உள்ள காலிப் பணியிடத்தை நிரப்ப வேண்டும், பெருங்குளம் பள்ளியில் கூடுதல் ஆசிரியா்கள் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் காலியிடங்களை மறைக்க மாவட்ட கல்வி நிா்வாகம் முயற்சிப்பதாகக் கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் கலை உடையாா், மாவட்டச் செயலா் செல்வராஜ் ஆகியோா் தலைமையில் ஏராளமான ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இரவு வரை போராட்டம் தொடா்ந்ததால் ஆசிரியா்கள் 30 பேரை தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com