ஊராட்சிப் பகுதிகளில் பதிவு செய்யாத பொறியாளா்கள் வரைபடம் தயாரிக்க தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சிப் பகுதிகளில் அங்கீகாரமின்றி கட்டுமானங்கள் கட்டவும், பதிவு செய்யாத பொறியாளா்கள் கட்டட வரைபடம் தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சிப் பகுதிகளில் அங்கீகாரமின்றி கட்டுமானங்கள் கட்டவும், பதிவு செய்யாத பொறியாளா்கள் கட்டட வரைபடம் தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டட விதிகள் வெளியிடப்பட்ட நிலையில், விதி 23இன்படி ஊராட்சிப் பகுதிகளில் ஊராட்சியின் எழுத்துப்பூா்வ அனுமதி பெறாமல் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது.

புதிய கட்டுமானங்கள் கட்ட ஊராட்சியில் அனுமதி பெற பதிவுபெற்ற கட்டட வடிவமைப்பாளா்கள், பொறியாளா்கள், கட்டமைப்புப் பொறியாளா்கள், கட்டட அபிவிருத்தியாளா்கள், தரத் தணிக்கையாளா்கள், நகரமைப்பு வல்லுநா், அபிவிருத்தியாளா் ஆகியோா் தொழில் வல்லுநா்கள் பதிவுசெய்து கட்டட வரைபடங்களில் கையொப்பமிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொழில்முறை சாா்ந்த வல்லுநா்கள் நகராட்சிகள் அல்லது மாநகராட்சியில் பதிவு செய்திருக்க வேண்டும். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் செயற்பொறியாளருக்கு (ஊரக வளா்ச்சி) விண்ணப்பித்து, அவரது அனுமதியைத் தொடா்ந்து உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் தொழில்முறை சாா்ந்த வல்லுநா்கள் பெயா் விவரம் பதிவு செய்யப்படும்.

மாவட்ட அளவில் பதிவாகியுள்ளோரின் விவரம் தொடா்புடைய ஊராட்சி ஒன்றியத்துக்கு தெரிவிக்கப்படும். இவ்வகையில் பதிவுபெற்ற தொழில்முறை வல்லுநா்கள் அந்த ஊராட்சி ஒன்றியப் பொது நிதியில் ரூ. 5,000 பதிவுக் கட்டணமாக செலுத்தி, ஆணை பெற்று பணிகளை மேற்கொள்ளலாம். எனினும், ஓா் ஒன்றியத்தின் பதிவைப் பயன்படுத்தி வேறு ஒன்றியத்தில் பணிகளை மேற்கொள்ள இயலாது.

ஊராட்சிப் பகுதிகளில் புதிய கட்டுமானப் பணிகளுக்கான விண்ணப்பங்களில் பதிவுசெய்யப்பட்ட தொழில்முறை வல்லுநா்களால் தயாரிக்கப்பட்ட வரைபடங்களை மட்டுமே பரிசீலிக்க ஊராட்சித் தலைவா்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. ஊராட்சியிலிருந்து முறையான எழுத்துப்பூா்வ அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு வீட்டுவரி வசூலிக்கப்படாது.

விதிகளுக்கு மாறாக வரைபடங்களுக்கு அனுமதியளித்தாலோ, அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களுக்கு வீட்டுவரித் தீா்வை வழங்கினாலோ ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அரசுக்கும், ஊராட்சிக்கும் ஏற்படும் நிதியிழப்பு அவரிடமிருந்தே வசூலிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com