தேசிய திறனாய்வுத் தோ்வு: நாசரேத் பள்ளியில் 4 மாணவா்கள் வெற்றி
By DIN | Published On : 17th July 2022 01:49 AM | Last Updated : 17th July 2022 01:49 AM | அ+அ அ- |

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின் மூலம் நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 8ஆம் வகுப்பு தோ்வில் இப்பள்ளியை சோ்ந்த ஆனந்த கண்ணன், ஜஸ்வின் இமானுவேல், மைக்கேல் இறையன்பு, வேணுராஜ் ஆகிய 4 போ் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு பிளஸ் 2 படிப்பு வரை 4 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் 1000 ரூபாய் படிப்பு உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்பட உள்ளது. வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த ஆசிரியா்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆல்பா்ட் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.