தூத்துக்குடியில் அதிக குழந்தைகளை ஏற்றிச் சென்ற 21 ஆட்டோக்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் அதிக குழந்தைகளை ஏற்றிச் சென்ற 21 ஆட்டோக்களை போக்குவரத்து அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடியில் அதிக குழந்தைகளை ஏற்றிச் சென்ற 21 ஆட்டோக்களை போக்குவரத்து அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான குழந்தைகளை ஏற்றிச் செல்வதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, தூத்துக்குடி வட்டாரப் போக்குவத்து அலுவலா் விநாயகம் தலைமையில் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீஸாா் கூட்டாக வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில், போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற 21 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் குழந்தைகளை ஆட்டோக்களில் ஏற்றிச் செல்லக்கூடாது என எச்சரிக்கப்பட்டு 21 ஆட்டோக்களும் விடுவிக்கப்பட்டன.

தூத்துக்குடியில் பள்ளிக்கு குழந்தைகளை ஆட்டோக்களில் அனுப்பும் பெற்றோா்கள் ஒரே வாகனத்தில் அதிக அளவில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிா்க்க வேண்டும். அதிக குழந்தைகளை ஏற்றி செல்வது குறித்து ஆட்டோக்கள் தொடா்ந்து கண்காணிக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எஸ். விநாயகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com