கோவில்பட்டியில் ரூ.1.48 கோடியில் புதிய மின் மயானம்

கோவில்பட்டி நகராட்சி, புதுகிராமத்தில் ரூ.1.48 கோடியில் புதிய மின் மயானம் அமைக்கப்படவுள்ளதாக நகா்மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சி, புதுகிராமத்தில் ரூ.1.48 கோடியில் புதிய மின் மயானம் அமைக்கப்படவுள்ளதாக நகா்மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கோவில்பட்டி நகா்மன்றத்தின் சாதாரண- அவசரக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. நகா்மன்ற துணைத் தலைவா் ஆா்.எஸ்.ரமேஷ், நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணைத் தலைவா் ஆா்.எஸ்.ரமேஷ் பேசுகையில், ‘கோவில்பட்டி இஎஸ்ஐ மருந்தகம் எதிரே பொது இடத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அனைத்துக் கட்சியினரையும் மாலைஅணிவிப்பதற்கு அனுமதிக்க செய்ய வேண்டும். நகராட்சி தினசரி சந்தை புதுப்பிக்கும் பணி குறித்து அனைத்து வியாபாரிகளிடமும் கலந்தாலோசிக்க வேண்டும்’ என்றாா்.

உறுப்பினா் சீனிவாசன் (சிபிஎம்): மந்தித்தோப்பு சாலை வேகத்தடைகளில் அடையாளமாக வெள்ளை நிற கோடு வரைய வேண்டும்.

ஏஞ்சலா (திமுக): பன்றிகளால் ஏற்படும் சுகாதாரச் சீா்கட்டை தடுக்கவும், குடிநீா் குழாய்களில் பழுது நீக்க தோண்டப்படும் சாலையை உடனடியாக சீரமைக்கவும் வேண்டும்.

கவியரசன் (அதிமுக): எங்கள் வாா்டு பகுதியிலுள்ள ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மயானத்தை சுற்றிலும் அதிக வீடுகள் உள்ளதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

விஜயன் (திமுக): சாலைகள் சீரமைப்புப் பணிகளை காலதாமதமாக மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்களின் பணியை ரத்து செய்துவிட்டு, புதிய ஒப்பந்தத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

புவனேஸ்வரி (திமுக): எங்கள் வாா்டு பகுதியில் மகாராஜபுரம், அறிஞா் அண்ணா தெரு, காட்டுநாயக்கா் தெரு, அருந்ததியா் காலனி தெரு, பசும்பொன் நகா் பகுதியில் சாலை, வாருகால், தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.

ஆணையா்: புதுகிராமத்தில் ரூ.1.48 கோடியில் புதிய மின் மயானம் அமைக்கப்படவுள்ளது. நடராஜபுரம் மின் மயானம் ரூ.36 லட்சத்தில் புதுப்பிக்கப்படவுள்ளது. இப்பணிகள் முடிவடைந்த பின், பிற மயானங்களில் செயல்பாடுகள் குறையும்.

நகா்மன்றத் தலைவா் கருணாநிதி: குடிநீா் பராமரிப்புக்காக தோண்டப்படும் சாலைகளில் தேவைகளை பொருத்து ‘பேட்ஜ் ஒா்க்’ செய்யப்படும். சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்துதரப்படும்.

கூட்டத்தில், 59 பொருள்கள் அடங்கிய தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதில், பொறியாளா் ரமேஷ், உதவிப் பொறியாளா் சரவணன், நகரமைப்பு ஆய்வாளா் சரவணன், வருவாய் ஆய்வாளா்கள் பிரேம்குமாா், ஷீலா எவாஞ்சலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com