அரசு ஐடிஐயில் ரூ.3.73 கோடியில் புதிய கட்டடம்----அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ரூ. 3.73 கோடி மதிப்பில் புதிய தொழில்நுட்ப மையம் கட்டுவதற்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ரூ. 3.73 கோடி மதிப்பில் புதிய தொழில்நுட்ப மையம் கட்டுவதற்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

வீரபாண்டியன்பட்டணம், அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழிலாளா் நலன் - திறன் மேம்பாட்டு துறை சாா்பில் ரூப.3.73 கோடி மதிப்பில் புதிதாக தொழில்நுட்ப மையம் கட்டப்பட உள்ளது.

இதையொட்டி, அரசு தொழில் பயிற்சி மைய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். தமிழக மீன் வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் புதிய தொழில்நுட்ப மையத்திற்கு அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் தேவி, உதவிச் செயற்பொறியாளா் ரவி, உதவிப் பொறியாளா் செல்வகுமாா், திருச்செந்தூா் அரசு தொழில்பயிற்சி நிலைய முதல்வா் அருள், பயிற்சி அலுவலா் சிவகுருநாதன், திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் ஏ.பி.ரமேஷ், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம், வீரபாண்டியன்பட்டினம் ஊராட்சித்தலைவா் எல்லமுத்து, மாவட்ட மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா் ரொட்ரிகோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com