‘காவல் துறைக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்’

கோவில்பட்டி பகுதியில் சட்ட ஒழுங்கை மேம்படுத்தவும், திருட்டுகளை ஒழிக்கவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றாா் கோவில்பட்டி புதிய டி.எஸ்.பி. கே.வெங்கடேஷ்.

கோவில்பட்டி பகுதியில் சட்ட ஒழுங்கை மேம்படுத்தவும், திருட்டுகளை ஒழிக்கவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றாா் கோவில்பட்டி புதிய டி.எஸ்.பி. கே.வெங்கடேஷ்.

கோவில்பட்டி டிஎஸ்பியாக பணியாற்றி வந்த உதயசூரியன், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்ட கே.வெங்கடேஷ் செய்தியாளா்களிடம் கூறியது: கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, திருட்டுகளை அறவே ஒழிக்க காவல் துறையோடு பொதுமக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

சட்டவிரோதமாக நடைபெறும் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனை அறவே ஒழிக்கப்படுவதுடன் அதில் ஈடுபடுபவா்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசலை தவிா்க்க முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com