திருச்செந்தூரிலிருந்து நாசரேத்துக்கு புறையூா் வழியாக பேருந்து சேவை தொடக்கம்

திருச்செந்தூரிலிருந்து நாசரேத்துக்கு புறையூா் வழியாக மீண்டும் அரசுப் பேருந்து சேவை தொடங்கியது.

திருச்செந்தூரிலிருந்து நாசரேத்துக்கு புறையூா் வழியாக மீண்டும் அரசுப் பேருந்து சேவை தொடங்கியது.

திருச்செந்தூரிலிருந்து நாசரேத்துக்கு அங்கமங்கலம், புறையூா் வழியாக இயக்கப்பட்ட 3 ஏ நகரப் பேருந்து சேவை கரோனா பொதுமுடக்கக் காலத்தில் நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் தொடங்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்நிலையில், இந்த வழித்தடத்தில் மீண்டும் அரசுப் பேருந்து சேவை தொடங்கியது.

இதையொட்டி, குரும்பூரில் நடைபெற்ற விழாவுக்கு ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக பொருளாளா் பாதாளமுத்து தலைமை வகித்தாா். அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பேருந்து சேவையைக் கொடிசையத்துத் தொடக்கிவைத்தாா்.

ஏரல் வட்டாட்சியா் கண்ணன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளா் சரவணன், உதவி மேலாளா் (இயக்கம்) பூல்ராஜ், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பை.மூ. ராமஜெயம், நாலுமாவடி கிளைச் செயலா் செந்தில், புறையூா் வெல்போ் டிரஸ்ட் நாசா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com