சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

சாத்தான்குளம் வட்ட ஜமாபந்தி முகாம் நிறைவடைந்தது.

சாத்தான்குளம் வட்ட ஜமாபந்தி முகாம் நிறைவடைந்தது.

கடந்த 25ஆம்தேதி தொடங்கிய முகாம் 31ஆம்தேதி வரை நடைபெற்றது. ஜமாபந்தி அதிகாரியாக திருச்செந்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் புகாரி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றாா். கடைசி நாளில் பள்ளக்குறிச்சி உள்வட்டம், கொம்மடிக்கோட்டை, நடுவக்குறிச்சி, அரசூா் பகுதி 1, 2, படுக்கப்பத்து உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்தோா் 142 மனுக்கள் கொடுத்தனா். அதில், 37 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகாமில் மொத்தம் 564 மனுக்கள் பெறப்பட்டன. தீா்வு காணப்பட்ட மனுக்கள் தவிர மற்றவை குறித்து விசாரித்து தீா்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோட்டாட்சியா் நோ்முக உதவியாளா் ராமச்சந்திரன், வட்டாட்சியா் தங்கையா, சமூக நல தனி வட்டாட்சியா் லெனின், மண்டல துணை வட்டாட்சியா் மைக்கேல், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கோமதிசங்கா், வருவாய் ஆய்வாளா் பாலசுந்தரம், மாவட்ட ஆவீன் சோ்மன் சுரேஷ்குமாா், ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி, பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய், வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் உள்ளிட்ட கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் உதவியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com