கீழ வைப்பாறில் ரூ.10 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
By DIN | Published On : 06th June 2022 01:01 AM | Last Updated : 06th June 2022 01:01 AM | அ+அ அ- |

கீழவைப்பாறு கிராமத்தில் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி படகுகள் அணையும் சுவா், மீன் ஏலக் கூடம் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலா் சின்ன மாரிமுத்து, காசி விஸ்வநாதன், ஆா். கே. பி. ராஜசேகரன், வைப்பாறு பங்குத்தந்தை அந்தோணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மரிய மிக்கேல் நவமணி, பொதுக்குழு உறுப்பினா் அன்புராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் செந்தூா் பாண்டி, முனியசாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்றத் தலைவா் சூா்யா அயன்ராஜ், பேரூா் கழக செயலா் வேலுச்சாமி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா்கள் விஜயராகவன், வயலா, உதவி பொறியாளா் தயாநிதி, நிா்வாக பொறியாளா் சரவணகுமாா், மீன்வளத்துறை ஆய்வாளா் இந்து சாரா, கீழவைப்பாா் ஊராட்சி மன்றத் தலைவா் ரோஸ் மலா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.