கருவேலம்பாடு முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சாத்தான்குளம் அருகே கருவேலம்பாட்டில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் 3 நாள்கள் நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே கருவேலம்பாட்டில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் 3 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாளில் திருமுறைப் பாராயணம், கும்ப பூஜை, நவக்கிரக பூஜை, ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை, 2ஆம் நாளில் 2, 3ஆம் கால யாகசாலை பூஜைகள், மூலமந்திர ஹோமங்கள், திரவ்யாஹுதி, பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, 3ஆம் நாளில் விக்னேஸ்வர பூஜை, மஹாபூா்ணாஹுதி, தீபாராதனை, கடங்கள் புறப்பாடு, விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மஹா கணபதி, மாரியம்மன், பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் தேவஸ்தான மகேந்திரகிரிநாதா் ஆலய அா்ச்சகா் சுப்பிரமணிய சா்மா கும்பாபிஷேக சா்வ சாதகங்களை நடத்தினாா். திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் சிவஸ்ரீ செந்தில் ஓதுவாா் திருமுறைப் பாராயணம் பாடினாா். திருக்குறுங்குடி முத்துகிருஷ்ணன் குழுவினா் நாகசுரம் இசைத்தனா்.

ஏற்பாடுகளை தொழிலதிபா் தனுஷ்கரன் தலைமையில் ஊா்ப் பொதுமக்கள், விழா கமிட்டியினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com