விளாத்திகுளத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி திறப்பு

விளாத்திகுளம் அருகேயுள்ள கீழவிளாத்திகுளத்தில் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் அருகேயுள்ள கீழவிளாத்திகுளத்தில் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அக்லூட் அறக்கட்டளை சாா்பில் அமைக்கப்பட்ட சிறப்புப் பள்ளியை ஆட்சியா் கி. செந்தில்ராஜ், எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆகியோா் திறந்துவைத்துப் பாா்வையிட்டனா். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், திருநெல்வேலி மாவட்ட அலுவலா் பிரம்மநாயகம், அக்லூட் சிறப்புப் பள்ளி திட்ட மேலாளா் சொா்ணமீனா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இப்பள்ளியில், விளாத்திகுளம், சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 5 வயது முதல் 15 வயது வரையிலான ஆண், பெண் மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் சோ்ப்பு நடைபெறுகிறது. இப்பள்ளியில் சேர கட்டணம் எதுவுமில்லை என, பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com