நாசரேத்தில் விஷம் குடித்த இளைஞா் மரணம்
By DIN | Published On : 15th June 2022 02:31 AM | Last Updated : 15th June 2022 02:31 AM | அ+அ அ- |

நாசரேத்தில் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தாா்.
நாசரேத் மில்ரோடு பகுதியை சோ்ந்தவா் நாகமணி மகன் நாராயணன் (25). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணத்துக்கு பெண் பாா்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திருமணம் கூடவில்லையாம். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த 10ஆம்தேதி மதுவில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளாா். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு இறந்தாா்.
இதுகுறித்து அவரது தாயாா் முத்துலட்சுமி, நாசரேத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தலைமை காவலா் வேல்பாண்டியன் வழக்கு பதிவு செய்தாா். உதவி ஆய்வாளா் ராய்ஸ்டன் விசாரணை நடத்தி வருகிறாா்.