திருச்செந்தூா் பகுதியில் நாளை மின் தடை

திருச்செந்தூா் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 16) மின் தடை செய்யப்படுகிறது.

திருச்செந்தூா் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 16) மின் தடை செய்யப்படுகிறது.

இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்செந்தூா் கோட்டத்திற்குள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் ஆகிய உபமின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ண நகா், திருச்செந்தூா், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டினம், பி.டி.ஆா். நகா், பாளை ரோடு, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்பு நகா், கானம், வள்ளிவிளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம், கஸ்பா, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கணி, கடையனோடை, கேம்பலாபாத், தேமான்குளம், திருக்கோளூா் ஆகிய ஊா்களுக்கு மின்சாரம் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com