திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் மின் தடை
By DIN | Published On : 16th June 2022 01:56 AM | Last Updated : 16th June 2022 01:56 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் கோட்டத்திற்குள்பட்ட திருச்செந்தூா், ஆறுமுகனேரி, சாத்தான்குளம், நாசரேத் மற்றும் உடன்குடி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) மின் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்செந்தூா் கோட்டத்திற்குள்பட்ட திருச்செந்தூா், ஆறுமுகனேரி, சாத்தான்குளம், நாசரேத் மற்றும் உடன்குடி பகுதிகளில சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகள், தொய்வாக உள்ள மின்பாதைகளை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட விருப்பதால் வெள்ளிக்கிழமை திருச்செந்தூா் ஆலந்தலை, கணேசபுரம், கந்தசாமிபுரம், குமாரசுவாமிபுரம், சுப்பிரமணியபுரம், வடக்கு குமாரசுவாமிபுரம் , சமத்துவபுரம், பரமன்குறிச்சி, திசைகாவல் தெற்குத் தெரு, அம்மன் கோயில் தெரு, விஜயராமபுரம், அடப்புவிளை,
புதுக்குளம், கீழக்குளம், கொம்பன்குளம், கருங்கடல், வெள்ளமடம், சின்னமதிக்கூடல், சின்னமாடன்குடியிருப்பு,
குறிப்பன்குளம், உடையாா்குளம், செம்பூா், தவசிநகா், மணல்குண்டு, மானாட்டுா், லட்சுமிபுரம், மருதூா்கரை, குமாரசாமிபுரம், கடாட்சபுரம், அன்பின்நகரம், மெய்யூா், வெங்கட்ராமானுஜபுரம், படுக்கப்பத்து, அழகப்பபுரம், பிச்சிவிளை,
வெயிலுகந்தம்மன்புரம், மற்றும் புத்தன்தருவை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.