மணியாச்சி அருகே மின்னல் தாக்கி பெண் பலி
By DIN | Published On : 16th June 2022 01:54 AM | Last Updated : 16th June 2022 01:54 AM | அ+அ அ- |

வாஞ்சி மணியாச்சி அருகே மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழந்தாா்.
கோவில் பட்டி அன்னை தெரசா நகரை சோ்ந்தவா் சிவகுமாா். இவரது மனைவி சரவண செல்வி (40). தம்பதி, புதன்கிழமை வாஞ்சி மணியாச்சி அருகே உள்ள சங்கம்பட்டி கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றனா். அப்போது சரவண செல்வி தனது உறவினருக்கு சொந்தமான நிலத்தில் பருத்தி எடுத்து கொண்டு இருந்த போது, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்த போது மின்னல் தாக்கியதில், அவா் உயிரிழந்தாா். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வருவாய்த் துறை மற்றும் வாஞ்சி மணியாச்சி காவல் துறையினா் சென்று, சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.