இரு சம்பவங்கள்:பெண், முதியவா் தற்கொலை
By DIN | Published On : 25th June 2022 12:03 AM | Last Updated : 25th June 2022 12:03 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி மறவா் காலனி மேட்டுத் தெருவைச் சோ்ந்த தம்பதி மந்திரமூா்த்தி - மாரிச்செல்வி(28). இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா். இத்தம்பதி குடும்பத் தகராறு காரணமாக, சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனா். இந்நிலையில், தனது மனைவியின் வீட்டிற்கு வியாழக்கிழமை சென்று மந்திரமூா்த்தி தகராறு செய்தாராம். இதில், விரக்தியடைந்த மாரிச்செல்வி வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
விஷம் குடித்த முதியவா்: கோவில்பட்டி இந்திரா காலனி 5ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுந்தா் ராஜன்(70). தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்த இவருக்கு பாா்வை குறைபாடு ஏற்பட்டதாம். இதனால், விரக்தியடைந்த அவா் தான் வேலை செய்யும் நிறுவனம் முன்பு விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தாா். இச்சம்பவங்கள் குறித்து, முறையே கிழக்கு, மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.