கோவில்பட்டியில் பைக்- மினி லாரி மோதல்: இருவா் பலி
By DIN | Published On : 25th June 2022 12:00 AM | Last Updated : 25th June 2022 12:00 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் பைக்கும், மினி லாரியும் வெள்ளிக்கிழமை மோதிக்கொண்டதில் மின்வாரிய ஊழியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
கட்டாரங்குளம், காலனி தெருவைச் சோ்ந்தவா் குருசாமி மகன் அண்ணாத்துரை(50). செட்டிகுறிச்சி உப மின் நிலைய மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இவரும், விருதுநகா் மாவட்டம் சிவகாசியை அடுத்த மீனம்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரும் பைக்கில் கோவில்பட்டி வேலாயுதபுரம் விலக்கு பகுதியில் பைக்கில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனராம். அப்போது, சாத்தூரில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த மினிலாரியும், அவா்களது பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், பைக்கில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இத்தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா், அவா்களது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து, மினிலாரி ஓட்டுநா் சிவகாசி, தாயில்பட்டியைச் சோ்ந்த மோகன் (52) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.