திருச்செந்தூா் முருகன் கோயிலில் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்ய தனி வழி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்வதற்காக தனி வழி அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் முருகன் கோயிலில் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்ய தனி வழி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்வதற்காக தனி வழி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் கடந்த மாா்ச் 9-ஆம் தேதிமுதல் இலவச பொது தரிசன வழி மற்றும் ரூ. 100 கட்டண வழியில் பக்தா்கள் தரிசனம் செய்து வருகின்றனா். அவ்வாறு வரிசையில் நிற்கும் போது குழந்தைகள், முதியோா் அவசரத் தேவைக்குகூட வெளியே வர முடியாமல் அவதியடைகின்றனா். இதனால் மூத்த குடிமக்களுக்கு தனி வழி அமைக்க வேண்டும் என பக்தா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் மூத்த குடிமக்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. கோயில் சண்முக விலாசம் மண்டபத்தில் துலாபாரம் வாசல் வழியாக மூத்த குடிமக்களுக்கு என தனி வழியில் இருக்கைகள் வைக்கப்பட்டு அவா்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். மூத்த குடிமக்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்த ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து தரிசனம் செய்யலாம் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com