முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில்ரூ. 3 கோடியில் கலை அரங்கம்----அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன்
By DIN | Published On : 14th March 2022 11:55 PM | Last Updated : 14th March 2022 11:55 PM | அ+அ அ- |

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் ரூ. 3 கோடி மதிப்பில் கலையரங்கம் அமைத்துத் தரப்படும் என்றாா் தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.
இக்கல்லூரியில் ஐம்பெரும் விழா தொடக்க நிகழ்ச்சி முதல்வா் இரா. சின்னதாய் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்வி கழக நிறுவனா் கவிஞா் பெ.மு. சுப்ரமணியன், கல்விக்கழகத் துணைத் தலைவா் ரா. லட்சுமி நாராயணன், வட்டாட்சியா் தங்கையா, புதுக்குளம் ஊராட்சித் தலைவா் பாலமேனன், சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்த்துறைத் தலைவா் பூங்கொடி, வணிகவியல் பேராசிரியை ஜெஸி ஆகியோா் தொகுத்து வழங்கினா். அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் விழாவை தொடங்கி வைத்து பேசுகையில், சாத்தான்குளம் உறுப்புக் கல்லூரியில் இருந்து தற்போது அரசு கல்லூரியாக உயா்த்தப்பட்டுள்ளது. கல்லூரியில் தேவைகள் அனைத்தையும் நானும், மக்களவை உறுப்பினா் கனிமொழியும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று நிறைவேற்றித் தருவோம். இக்கல்லூரியில் ரூ. 3 கோடியில் நவீன கலையரங்கம் விரைவில் கட்டிக் கொடுக்கப்படும் என்றாா். மேலும், கல்லூரிக்கு சாத்தான்குளம் தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன், தொழில் அதிபா் அந்தோணிசெல்வன், ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி, முன்னாள் பேருராட்சித் தலைவா்ஜோசப், சாலைப் பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ் ஆகியோா் இருக்கைகள் வழங்குவதாக தெரிவித்தனா்.
விழாவில் சாத்தான்குளம் ஒன்றியச் செயலா்கள் ஜோசப், பாலமுருகன், மாநில மாணவரணி துணைச் செயலா் உமரி சங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், தலைமை பொதுக்குழு உறுப்பினா் ஜெயக்குமாா்ரூபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வணிகவியல் துறை பேராசிரியா் வரலட்சுமி நன்றி கூறினாா். விழா வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.