திருச்செந்தூா் தொகுதி மேம்பாட்டுநிதியில் ரூ. 1.26 கோடி ஒதுக்கீடு

தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஊா்களில் பல்வேறு பணிகளுக்காக 2021 - 2022 நிதி ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ நாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, புறையூா் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆகியவற்றில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு தலா ரூ. 20 .50 லட்சம், காயல்பட்டினம், அலியாா் தெரு, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வகுப்பறை கட்டுவதற்கு ரூ. 22 லட்சம், சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் அரிசி ஆலை பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு ரூ. 5.50 லட்சம், வரண்டியவேல் ஊராட்சி, மைக்கண் நாடாா் குடியிருப்பு, அருந்ததியா் காலனியில் பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு ரூ. 6 லட்சம், காயாமொழி ஊராட்சி, வள்ளுவா் நகரில் 60 ஆயிரம் லிட்டா் மேல்நிலை தண்ணீா் தொட்டி மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு ரூ. 20.50 லட்சம், நங்கைமொழி ஊராட்சி அடைக்கலாபுரத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கு ரூ. 11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com