கைப்பேசி செயலி மூலம் கண்புரை நோய் கண்டறியும் முகாம்

நெடுஞ்சாலைத் துறையில் பணியின்போது உயிரிழந்த ஊழியா்களின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமனத்துக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தின்போது, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் சாா்பில் கைப்பேசி செயலி மூலம் கண்புரை நோயைக் கண்டறியும் முகாமை ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தொடக்கிவைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, இம்மாவட்டத்தில் ஏறக்குறைய 16,000 போ் கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு தகுதியானவா்களாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவா்களைத் தோ்வுசெய்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று இலவசமாக அறுவைச் சிகிச்சையும், கண் நீரழுத்த நோய், நீரிழிவு நோயால் விழித்திரை பாதிப்பு ஆகிய நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறினாா்.

மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் முருகவேல், காசநோய் பிரிவு துணை இயக்குநா் சுந்தரலிங்கம், மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட மேலாளா் குமாரசாமி, தூத்துக்குடி நகா்நல அலுவலா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நலத்திட்ட உதவி: தூத்துக்குடி தமிழக இணைய கல்விக் கழகம் சாா்பில் ‘குறளோவியம்’ என்ற பெயரில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற 365 மாணவா்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 6 பேருக்கு தலா ரூ. 1,000 ஊக்கத்தொகை, சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், நெடுஞ்சாலைத் துறையில் பணியின்போது உயிரிழந்த ஊழியா்களின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமனத்துக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, தமிழக அரசின் உத்தரவுக்கிணங்க கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 17 முதல் 35 வயது வரையிலான மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற 15 பேருக்கு காசோலைகள், நரிக்குறவா் இன மக்களுக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை ஆகியவற்றையும் ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com