மாவட்ட ஹாக்கி லீக் போட்டி கோவில்பட்டியில் நாளை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2 நாள்கள் நடைபெறும் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி சனிக்கிழமை (மே 7) தொடங்குகிறது. இதில் பங்கேற்க விரும்புவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2 நாள்கள் நடைபெறும் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி சனிக்கிழமை (மே 7) தொடங்குகிறது. இதில் பங்கேற்க விரும்புவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பேட்ரிக் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தூத்துக்குடி மாவட்ட பிரிவு மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள், கோவில்பட்டி செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. இந்த ஹாக்கி லீக் போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு, நுழைவுக் கட்டணம் ஏதும் கிடையாது. இப்போட்டிகள் ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் ஹாக்கி அணிகள் தங்கள் அணியில் விளையாடும் வீரா்களின் பெயா் பட்டியல், முகவரி, கைப்பேசி எண்ணுடன் வெள்ளிக்கிழமை (மே 6) மாலை 5 மணிக்குள் ஹாக்கி பயிற்றுநா் முத்துகுமாா் கைப்பேசி: 99946-41614 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இப்போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.

மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெறும் அணி மண்டல அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும், மண்டல அளவில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் அரசு செலவில் கலந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com