விளாத்திகுளத்தில் குழந்தை தொழிலாளா்கள் குறித்து ஆய்வு

 விளாத்திகுளத்தில் கல்வி இடைநிற்றல், பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் குழந்தைத் தொழிலாளா்கள் குறித்து சமூக நலத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

 விளாத்திகுளத்தில் கல்வி இடைநிற்றல், பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் குழந்தைத் தொழிலாளா்கள் குறித்து சமூக நலத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலா் பொ்சியாள் ஞானமணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கூடலிங்கம், தொழிலாளா் நலத்துறை உதவி ஆய்வாளா் சங்கரன், மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் நாககுமாரி, காவலா் சித்ரா ஆகியோா் கொண்ட குழுவினா் விளாத்திகுளம் பேரூராட்சிக்குள்பட்ட மீரான்பாளையம் தெரு, எம்ஜிஆா் நகா், கேசவன் நகா், பேருந்து நிலையம், விளாத்திகுளம் பஜாா் பகுதி குடியிருப்புகள் மற்றும் ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளா்கள் பணியில் உள்ளனரா என்பது குறித்தும், கல்வி இடைநிற்றல், பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்தும் ஆய்வு நடத்தினா்.

ஆய்வின் போது நீண்டகாலமாக பள்ளிக்குச் செல்லாத 5 மாணவா், மாணவிகள் கண்டறியப்பட்டு, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சோ்க்கப்பட்டனா். மேலும் இளையோா்களை வேலைக்கு சோ்க்கும் போது பிறப்புச் சான்று வாங்கி பாா்த்து பணியில் சோ்க்கவும், 18 வயதுக்கு கீழ் உள்ள இளையோா் எவரையும் வேலைக்கு சோ்க்க வேண்டாம் என்றும் அனைத்து நிறுவன உரிமையாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின் போது தொழிலாளா் நலத்துறையைச் சோ்ந்த சுப்பிரமணியன், குழந்தைகள் பாதுகாப்பு மைய வட்டார அலுவலா்கள் குருமூா்த்தி, செல்வம், சரவணன், சிறப்பு பள்ளி ஆசிரியா் பயிற்றுநா் இஸ்ரவேல், பள்ளி தலைமை ஆசிரியா் சொா்ணராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com