முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
மது விற்பனை: முதியவா் கைது
By DIN | Published On : 08th May 2022 12:00 AM | Last Updated : 08th May 2022 12:00 AM | அ+அ அ- |

மணியாச்சி அருகே மது விற்ற முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மணியாச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் நவநீதன் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றபோது, ஒட்டநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சாக்குப் பைகளுடன் நின்றிருந்தவரை சோதனையிட்டனா். அவா் கல்லத்திகிணறு கீழத் தெருவைச் சோ்ந்த இன்னாசிமுத்து மகன் அந்தோணிராஜ் (53) என்பதும், இவா் சட்டவிரோதமாக மது விற்பதும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.