தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சனிக்கிழமை 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சனிக்கிழமை 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தென் கிழக்கு வங்கக் கடலுக்கும், தெற்கு அந்தமான் கடலுக்கும் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி, பிறகு புயலாக வலுவடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகலில் திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சில இடங்களில் சாலையோர மரங்கள் முறிந்து விழுந்தன.

இந்நிலையில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி குறித்து மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், சனிக்கிழமை 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com