முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 08th May 2022 12:00 AM | Last Updated : 08th May 2022 12:00 AM | அ+அ அ- |

தமிழகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடா்து சனிக்கிழமை 365 மரக்கன்றுகள் நடப்பட்டன.
தமிழகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் 100 இடங்களில் நகா்புற அடா்காடு வளா்ப்பு முறையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட திரவிய ரத்தின நகா் பகுதியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் சாருஸ்ரீ ஆகியோா் அரசு, இலுப்பை, வாதுமை, மா, மருது, நீா் மருது, பக்காகொட்டை, பூவரசு, புங்கை, புளி, பென்சில், நாவல், தான்ட்ரிக்காள், வேம்பு உள்பட 16 வகையான 365 நாட்டு மரக்கன்றுகளை நட்டனா்.
தொடா்ந்து, தமிழக அரசின் சாதனை குறித்து செய்தி மக்கள் தொடா்புத்துறையின் சாா்பில் தயாரிக்கப்பட்ட ‘கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி நிறைவான வளா்ச்சியில் நிலையான பயணம்‘ என்ற புத்தகத்தை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வெளியிட , மேயா் ஜெகன் பெரியசாமி பெற்றுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் சிவசுப்பிரமணியன், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சு. ஜெகவீரபாண்டியன், துணை மேயா் ஜெனிட்டா செல்வராஜ், வட்டாட்சியா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.