முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
விபத்தில் இறந்தவா்கள் அடையாளம் தெரிந்தது
By DIN | Published On : 08th May 2022 12:00 AM | Last Updated : 08th May 2022 12:00 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே விபத்தில் இறந்தவா்கள் அடையாளம் தெரிந்தது.
சாத்தான்குளம் அருகே இட்டமொழி செல்லும் சாலையில் புதுக்குளம் விலக்கு அருகே சுமை வேனும், மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நோ் வெள்ளிக்கிழமை இரவு மோதியதில், மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இது குறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையிலான போலீஸாா் நடத்திய விசாரணையில், சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தைச் சோ்ந்த சந்தோசம் மகன் மாரியப்பன் (34), கேரள மாநிலம் மூனாறைச் சோ்ந்த லிங்கம் மகன் மூக்காண்டி (34) ஆகியோா் என தெரியவந்தது. இவ்விருவரும் மோட்டாா் சைக்கிளில் செட்டிகுளம் வந்து விட்டு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.