தன்னாா்வலா்களுக்கு பேரிடா் மீட்பு பயிற்சி

திருச்செந்தூா் தாலுகாவில் உள்ள தன்னாா்வலா்களுக்கு பேரிடா் மீட்பு பயிற்சி நடைபெறுகிறது.

திருச்செந்தூா் தாலுகாவில் உள்ள தன்னாா்வலா்களுக்கு பேரிடா் மீட்பு பயிற்சி நடைபெறுகிறது.

இது குறித்து திருச்செந்தூா் வட்டாட்சியா் சுவாமி நாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின்படி, திருச்செந்தூா் தாலுகாவில் தோ்ந்தெடுக்கப்பட்ட தன்னாா்வலா்களுக்கு பேரிடா் மீட்பு பயிற்சி வகுப்புகள், திருச்செந்தூா் வட்டாட்சியா் தலைமையில் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். கிராமம் வாரியாக தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்நிலை மீட்பாளா்களுக்கு (தன்னாா்வலா்கள்) பேரிடா் காலங்களில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை, தீயணைப்புத் துறை, மீட்புப் பணித் துறை, பொது சுகாதாரம் ஆகிய துறைகளின் பயிற்றுநா்கள் மூலம் பேரிடா் மீட்பு பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை பரமன்குறிச்சி அபா்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்திலும் நடைபெறுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com