முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
அரசூா் ஊராட்சியில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம்
By DIN | Published On : 12th May 2022 03:54 AM | Last Updated : 12th May 2022 03:54 AM | அ+அ அ- |

சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி அலுவலகத்தில் வேளாண்மை- உழவா் நலத் துறை சாா்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அனைத்துத் துறைகளின் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜாசிங் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் வேளாண் உதவி இயக்குநா் சுதாமதி பயிா்க் காப்பீடு உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கினாா். விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கால்நடை உதவி மருத்துவா் சௌந்தா் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்ததுடன் கால்நடை வளா்ப்பு குறித்தும், உதவி செயற்பொறியாளா் நடராஜன், உதவிப் பொறியாளா் கவினேஸ் ஆகியோா் மதிப்புக் கூட்டு இயந்திரங்கள் வழங்குதல், சூரிய கூடார உலா்த்தி, மின்வேலி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்து, துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். கிராம நிா்வாக அலுவலா் ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா்கற்பகம் செய்திருந்தாா்.