முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தேமுதிக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் நியமனம்
By DIN | Published On : 12th May 2022 03:38 AM | Last Updated : 12th May 2022 03:38 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: தேமுதிக தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக சுப்பையா என்ற சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து தேமுதிக தலைவா் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக பொறுப்பாளராக சுப்பையா என்ற சுரேஷ் புதன்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளாா். இவருக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், கிளை கழக நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் ஒத்துழைப்பு தந்து கட்சி வளா்ச்சி பெற பாடுபட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பின்னா் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சுப்பையா என்ற சுரேஷுக்கு கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.