முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம்
By DIN | Published On : 13th May 2022 12:53 AM | Last Updated : 13th May 2022 12:53 AM | அ+அ அ- |

ஆழ்வாா்திருநகரி வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் பற்றிய அனைத்து துறைகளின் சிறப்பு முகாம் பேய்க்குளத்தில் நடந்தது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அல்லிராணி முன்னிலை வகித்தாா். அனைத்து துறைகளின் அலுவலா்களும் தங்கள் துறைகளின் திட்டங்களைப் பற்றி பேசினா். விவசாயி சுப்பிரமணியனுக்கு கைத்தெளிப்பான் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளா் ஜெயா, கிராம நிா்வாக அலுவலா் சிவகாமி, வேளாண் பொறியியல் துறை வேலுமணி, வேளாண் அலுவலா்கள் திருச்செல்வம், தங்க மாரியப்பன், வேளாண் உதவி அலுவலா் திருநீலகண்டன், கால்நடை மருத்துவா் தாமோதரன், விவசாய சங்கத் தலைவா் சங்கரகுமாா், ஊராட்சிச்செயலா் மனுவேல், கிராம உதவியாளா் ரவிக்குமாா், சிகரம் இயக்குநா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.