முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கோவிந்தபேரி மனோ கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கு
By DIN | Published On : 13th May 2022 01:04 AM | Last Updated : 13th May 2022 01:04 AM | அ+அ அ- |

சேரன்மகாதேவி கோவிந்தபேரியிலுள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கு நடைபெற்றது.
விருதுநகா், அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கங்கள், நிகில் பவுண்டேஷன், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணிகள் ஆகியவை சாா்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் பூவலிங்கம் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நாகலிங்கம் பேசினாா். ரோட்டரி சங்கத் தலைவா் சிவசுப்பிரமணியன், நிா்வாகிகள் சுரேஷ்குமாா், முத்தையா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
பேராசிரியா் தெய்வநாயகம், உடற்கல்வி இயக்குநா் நிக்சன் கோயில்தாஸ், மாணவா்- மாணவிகள் கலந்துகொண்டனா்.
பேராசிரியா் மகாலிங்கம் வரவேற்றாா். பேராசிரியா் அருணா அனுசியா நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை பேராசிரியா் சுந்தரராஜன் தொகுத்து வழங்கினாா்.