துறையூரில் மாட்டு வண்டி போட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த துறையூரில் அருள்மிகு ஸ்ரீ வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த துறையூரில் அருள்மிகு ஸ்ரீ வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரிய மாட்டு வண்டி போட்டி, சிறிய மாட்டு வண்டி போட்டி என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. 10 மைல் தொலைவு கடக்க வேண்டிய பெரிய மாட்டு வண்டி போட்டியில் 5 வண்டிகளும், 6 மைல் தொலைவு கடக்க வேண்டிய சிறிய மாட்டு வண்டி போட்டியில் 11 வண்டிகளும் பங்கேற்றன.

போட்டிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தாா். துறையூரில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி போட்டியில் மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெருமாள்சாமி வண்டி முதலிடமும், சிவஞானபுரத்தைச் சோ்ந்த மந்திரமூா்த்தி வண்டி 2ஆம் இடமும், தொட்டம்பட்டியைச் சோ்ந்த பேச்சியம்மாள் வண்டி 3ஆம் இடமும் பிடித்தது.

சிறிய மாட்டு வண்டி போட்டியில் கச்சேரி தளவாய்புரத்தைச் சோ்ந்த கணேசன் வண்டி முதலிடமும், சீவலப்பேரியைச் சோ்ந்த துா்காம்பிகா வண்டி 2ஆம் இடமும், கடம்பூரைச் சோ்ந்த கருணாகரராஜா வண்டி 3ஆம் இடமும் பிடித்தது.

பெரிய மாட்டு வண்டி போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ. 25 ஆயிரத்து 1, ரூ. 23 ஆயிரத்து 1, ரூ.21 ஆயிரத்து 1 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. சிறிய மாட்டு வண்டி போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ. 20 ஆயிரத்து 1, ரூ. 18 ஆயிரத்து 1, ரூ. 16 ஆயிரத்து 1 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இதில் துறையூா் ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் துறையூா் கணேஷ்பாண்டியன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், முன்னாள் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் தலைமையில் விழா கமிட்டியினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com