மேலாத்தூா் முத்தாரம்மன் கோயிலில் கொடை விழா

மேலாத்தூா் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.

மேலாத்தூா் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.

இக்கோயிலில் கொடை விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, அம்மனுக்கு பல்வேறு அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன. கொடை விழா நாளான செவ்வாய்க்கிழமை பழைய காயல் சங்குமுகம் விநாயகா் கோயிலிலிருந்து மேளதாளங்கள் முழங்க புனித நீா் கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம், பின்னா், மதியக் கொடைவிழா நடைபெற்றது. நள்ளிரவில் சாமக்கொடையை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை, புதன்கிழமை மஞ்சள் நீராடுதல், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் 3 நாள்களும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஊா் நிா்வாக கமிட்டியினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com